5 மாதங்களில் கூடியளவான பாஸ்போர்ட் விநியோகம்

இந்த ஐந்து மாதங்களில் வழமையிலும் பார்க்க அதிகளவிலான கடவுச்சீட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக அதிகமானவர்கள் விண்ணப்பிதனால் இந்த நிலை உருவாகியுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்கள பேச்சாளர் பியுமி பண்டார தெரிவித்துள்ளார்.

முதல் ஐந்து மாதங்களில் 288,645 கடவுச்சீட்டுகள் வழங்கபப்ட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு, முழு ஆண்டுமே 382,506 கடவுச்சீட்டுகளே வழங்கப்பட்டுள்ளன.

இந்த வருடம் ஜனவரி முதல், கடந்த மாதம் வரை முறையே 52,278, 74,890, 53,151, 52,945 எனும் மாதாந்த தொகையில் விநியோகம் நடைபெற்றுள்ளது.

கடவுசீட்டு விநியோகப்பதில் கடினமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும், முற் பதிவுகளை மேற்கொள்ளாமல் நேரடியாக வரவேண்டாம் எனவும் குடிவரவு, குடியகல்வு திணைக்களம் மீண்டும் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

5 மாதங்களில் கூடியளவான பாஸ்போர்ட் விநியோகம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version