உர கடன் ஒப்பந்தம் இந்தியாவுடன் நிறைவு.

இந்தியா, ஏற்றுமதி, இறக்குமதி வங்கி (எக்சிம்) 55 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு கடனாக வழங்கியுள்ளது. யூரியா உரத்தினை கொள்வனவு செய்வதற்காக குறுகிய கால கடனடிப்படையில் இந்த கடன் வழங்கப்பட்டுள்ளது.

கடனுதவி திட்டத்தினூடாக யூரியா இலங்கைக்கு வரவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கொழும்பில் நேற்று நிதியமைச்சின் செயலாளர் K. M. மஹிந்த ஸ்ரீவர்தன, எக்சிம் பொது முகாமையாளர் நிர்மிட் வெட், ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டுளள்து.

ஒப்பந்தம் கைச்சாத்திடும் போது இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும், இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பக்லே ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.

இந்த கடனுதவி திட்டத்தையும் இணைத்து இதுவரை இந்தியா 2.73 பில்லியன் அமெரிக்க டொலர் கடன்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. பெற்றோலிய கடன்கள், புகையிரத திட்டங்கள், பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களுக்காக இந்த கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியா ஏற்றுமதி இறக்குமதி வங்கி இதுவரை 274 கடனுதவி திட்டங்களை 61 நாடுகளுக்கு வழங்கியுள்ளதாகவும், 27.81 பில்லியன் அமெரிக்க டொலர் மொத்த தொகை எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

உர கடன் ஒப்பந்தம் இந்தியாவுடன் நிறைவு.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version