நபர்கள் மாறினாலும் நடந்து கொண்டிருப்பது ஒரு வகையான மோசடிமிக்க ராஜபக்ஸ அரசாங்கத்தின் நீட்சியே என (12.06) ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் குழுவுடனான சந்திப்பின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
மின்சார சபையின் தலைவர், கோப் குழுவில் வெளிப்படுத்திய விடயம் மிகவும் பாரதூரமானது எனவும் யாருடைய செல்வாக்கின் பிரகாரம் அதனை அவர் தற்போது மறுக்கின்றார் என்பதை கூறவேண்டும் எனவும் சஜித் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஜனாதிபதி, மின்சார சபை தலைவரை அழைத்து இந்திய பிரதமர் மோடி வற்புறுத்துவதாக கூறி மன்னார் காற்றாலை மின் திட்டம் விலைமனு கோரப்படாமல் இந்திய அதானி நிறுவனத்துக்கு வழங்க முடிவு செய்தது குறித்து மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ அவர்கள் கோப் குழுவில் தெரிவித்த கருத்துக்கள் அந்தத் தருணத்தில் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாகவே அதனை தான் செய்ததாக இன்று கூறுவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இவ்வாறான பொறுப்பற்ற அறிக்கைகளை கோப் குழுவின் முன்னால் எவ்வாறு கையாள முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார் எதிர்க்கட்சி தலைவர்.
தலைவர் உண்மையைச் சொல்வதற்குப் பதிலாக அவரே மீண்டும் ஒரு பொய்யை கூற வரும் நாடகத்தின் மூலம் நாட்டில் மக்கள் பிரதிநிதிகளினதும் நாட்டு மக்களினதும் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும்,
மக்களுக்கு அழுத்தத்திற்கு மேல் அழுத்தத்தை பிரயோகித்து திருட்டும், ஒடுக்கி சுரண்டலுமே வழமை போன்று இன்றும் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், இது முழுக்க முழுக்கவே ராஜபக்ஸ அரசாங்கத்தினது ஒரு நீட்சி எனவும் அவர் தெரிவித்தார்.
