இலங்கை மின்சாரசபையின் தலைவர் கூறிய சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பில் இந்திய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கருத்து வெளியிட்டுள்ளார்.
“இந்தியாவுக்குள் தனது அத்துமீறிய அதிகாரத்தை காட்டும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதிக்கம் பாக்கு நீரிணையை தாண்டி அண்டைய நாட்டுக்கும் சென்றுள்ளது” என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை மின்சாரசபை தலைவர் பாராளுமன்ற கோப் குழு முன்னிலையில் “இந்திய பிரதமரின் அழுத்தம் காரணமாக, ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்திய அதானி குழுமத்துக்கு மன்னார் மற்றும் பூநகரி காற்றலை மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தத்தை வழங்க முடிவெடுத்ததாக கூறியிருந்தார். பின்னர் அவரே தான் இந்த விடயங்களை தன பிழையாக கூறியதாக வாபஸ் பெற்றுக் கொண்டார். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவ்வாறு எந்த அழுத்தங்களையோ, ஆலோசனைகளையோ தான் வழங்கவில்லை என மறுப்பறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த விடயம், இலங்கை – இந்தியா தற்போதைய உதவி செயற்பாடுகளுக்குள் பாதிப்பை ஏற்படுத்தும் என சிலர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறான நிலையிலேயே நேற்று ராகுல் காந்தி இந்த விடயம் தொடர்பில் இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியினை விமர்சித்து கருத்து வெளியிட்டுள்ளார்.