இலங்கைக்கு மத்திய கிழக்கு நாடுகள் உதவி வழங்க தயாராகவில்லை என தான் கூறியதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கூறிய கருத்தினை, மாலைதீவுகள் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட் மறுத்துள்ளார். தான் கூறிய விடயங்கள் சரியாக தெரிவிக்கப்படவில்லை எனவும், பல நாடுகள் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாகவும், நாடுகளது உதவிகள் கிடைக்குமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் மத்திய கிழக்கு நாடுகளிடம் மாலைதீவுகள் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட் இலங்கைக்கு உதவுமாறு கேட்டபோது அந்த நாட்டு தலைவர்கள் மறுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா உரையாற்றியிருந்தார்.
தொடர்புடைய செய்தி
