சர்வதேச நாணயநிதியத்தின் கடன்கள் இலங்கைக்கு இந்த வருடத்துக்குள் கிடைக்காதென ஐக்கிய மக்கள் சக்தியின் பாரளுமன்ற உறுப்பினர் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்டுள்ளார். இம்மாதம் இலங்கை வரவிருக்கும் சர்வதேச நாணய அலுவலர்கள், அலுவலக மட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டாலும், கடன் உடனடியாக கிடைக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதர நிபுணரான ஹர்ஷ டி சில்வா, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கிடைக்க அதன் பணிப்பாளர் சபை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டும். அந்த கைச்சாத்திடுவதற்கு இலங்கை பல வேலைத்திட்டங்களை செய்ய வேண்டியுள்ளது. இலங்கையின் இலாபத்தை அதிகரிக்க வேண்டும், செலவுகளை குறைக்க வேண்டும். அனைத்துக்கும் மேலாக செலுத்த வேண்டிய கடன்களை மீள செலுத்துவது தொடர்பான திட்டங்களை தயாரித்து வழங்க வேண்டும். இவ்வாறு பல கடினமான வேலைத்திட்டங்களை செய்ய வேண்டும். இவை இலகுவான விடயங்களல்ல என கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் உடனடியாக பணம் கிடைக்காவிட்டாலும், வெளிநாடுகளிலிருத்து பணம் பெறலாம் என கூறினார்கள். ஜப்பான் கடன் தருமென்றார்கள். ஜப்பான் தூதுவரிடம் இது தொடர்பாக தான் பேசிய போது, “இலங்கை மீதான நம்பிக்கையை நாம் முழுவதுமாக இழந்துவிட்டோம். குறுகிய கால கடனை வழங்குவதாக இருந்தால் அனைத்து கட்சி அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் அல்லது ஒப்பந்தத்தில் எதிர்க்கட்சியும் கைச்சாத்திட வேண்டும்” என்று ஜப்பான் தூதுவர் தன்னிடம் கூறியதாக ஹர்ஷா தெரிவித்தார்.
மாலதீவுகள் முன்னாள் ஜனாதிபதி நஷீட்டிடம், இலங்கைக்கு டொலர் தேடி தருமாறு ஒப்பந்தம் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. “சவுதி அரேபியா முடிக்குரிய அரசர் மொஹமட் பின் சல்மான் உடன் தொலைபேசியூடாக இலங்கைக்கு உதவுமாறு கேட்டேன். அவர்களிடம் குறைந்தது ஒரு திட்டமாவது இருக்கிறதா” என நஷீட்டிடம் கேள்வியெழுப்பியதாக நஸீட்டை சந்தித்த வேளையில் தன்னிடம் கூறியதாக ஹர்ஷா MP நடைபெற்ற நிகழ்வில் கூறினார்.
“அதேபோன்று ஐக்கிய அரபு இராட்சிய ஜனாதிபதியிடம் பேசிய வேளையில் இலங்கையில் விற்பனை செய்யக்கூடிய பொருட்கள் பட்டியலை தாருங்கள். நான் யோசித்து பார்க்கிறேன்” எனவும் நஸீட்டுக்கு தெரிவித்துள்ளதாக கூறிய பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா,
இந்தியாவும் இதற்கு மேல் எம்மால் முடியாதென கைவிரித்தால் என்ன நடக்கும் என கேள்வியெழுப்பினார்.