இலங்கையின் கடன் மறுசீரமைப்பு ஆலோசகர்கள் இலங்கை வருகை

இலங்கை, வெளிநாட்டு கடன்களை மீள செலுத்துவது மற்றும் மறு சீரமைப்பது தொடர்பிலான ஆலோசனைகளை இலங்கைக்கு வழங்குவதற்காக இலங்கையினால் நியமிக்கப்பட்டுள்ள நிறுவனங்களது பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர்.

நிதி ஆலோசனை நிறுவனமான லஸ்சார்ட், சட்ட ஆலோசனை நிறுவனமான க்ளிபோர்ட சான்ஸ் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளே நேற்று(14.06) இலங்கை வந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இந்த வாரம் இலங்கை வரவுள்ள நிலையிலேயே இவர்கள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டங்கள் மற்றும் அவர்களது திட்டங்களை ஆரம்பிப்பதற்கு இந்த நிதி மற்றும் சட்ட ஆலோசனை நிறுவனங்கள் இலங்கையினால் நியமிக்கப்பட வேண்டும். அதனடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆலோசனை நிறுவன அலுவலர்கள், சர்வதேச நாணய நிதிய அலுவலகர்களுடனான கூட்டத்தில் பங்கெடுக்கவே இலங்கை வந்துள்ளதாக நம்பப்படுகிறது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு ஆலோசகர்கள் இலங்கை வருகை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version