அமெரிக்க ஜனாதிபதி இலங்கைக்கு உதவுவதாக உறுதி – பிரதமர்

50 சதவீதமளவிலான எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு பிரச்சினைகளை வரும் வாரங்களில் ஈடு செய்யலாமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

35,000 மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவுடன் ஒரு கப்பல் வந்துள்ளது. இறக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றை முன்னுரிமை அடிப்படையில் மொத்த கொள்வனவாளர்களான வைத்தியசாலைகள், தகன சாலைகள், ஹோட்டல்களுக்கு வழங்கவுள்ளதாக பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 7 நாட்களுக்கான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர், வரும் வாரம் 40,000 மெற்றிக் தொன் எரிபொருள் வருகை தரவுள்ளதாகவும், இந்தியாவுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட எதிர்பார்த்துள்ளதாகவும், அதன் மூலம் 50 சதவீத எரிபொருள் சிக்கல் தீருமெனவுவம் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கை, டொலர் பிரச்சினையில் மட்டுமல்ல, பணப்பிரச்சனையையும் எதிர்கொண்டுள்ளது. இவை தொடர்பில் சர்வதேச நாணய நிதிய பணிப்பாளரிடம் கதைத்துள்ளேன். அவர் உதவுவதாக தெரிவித்துள்ளார். உலக உணவு திட்டத்துடனும் பேசப்பட்டுள்ளது. இவற்றுக்கு மேலாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அமெரிக்கவுக்கான இலங்கை தூதுவரிடம் உதவுதாக வொஷிங்டனில் கூறியுள்ளார். உலகமே எங்களை பார்த்துக்கொண்டுள்ளது. அவர்கள் எங்களுக்கு உதவ தயாராகவுள்ளனர்” என பிரதமர் ரணில் விக்ரசமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறக இருந்தாலும் நாம எமக்கு உதவ வேண்டும். கடன் மீள் செலுத்துகை திட்டத்தினை உடனடியாக செயற்படுத்த வேண்டும் எனவும் மேலும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி இலங்கைக்கு உதவுவதாக உறுதி - பிரதமர்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version