இலங்கை மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு அமெரிக்காவின் மிகப் பெரிய உதவி.

அமெரிக்கா இலங்கையில் ஏற்பட்டுள்ள அவசர நிலையை கருத்திற் கொண்டு 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட, வறுமைக்கோட்டுக்குட்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக இந்த தொகை நன்கொடையாக வழங்கப்படவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்த செயற்பாடுகளுக்கு பொருளாதார மற்றும் நிதி மேம்பாட்டுக்கு இந்த உதவி தொழில்நுட்ப ரீதியில் கைகொடுக்குமெனவும், பொருளாதார மற்றும் அரசியல் சிக்கல் நிலைகளினால் இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு இலங்கையின் நீண்டகால பங்காளர் என்ற அடிப்படையில் இலங்கைக்கு அமெரிக்கா கைகொடுக்கும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

வழங்கப்படும் இந்த உதவிகள் அமெரிக்க அரசாங்கத்தின் அபிவிருத்தி கரங்களின் மூலம், அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிறுவனம் (USAID) மூலம் செயற்படுத்தப்படவுள்ளது. சிறிய அளவிலான விவசாசயிகள், விவாசாய தயாரிப்புகளை வழங்குபவர்கள், சிறு வியாபார துறையில் ஈடுபடுபவர்களுக்கு இந்த திட்டங்கள் வழங்கப்படவுள்ள அதேவேளை, தேசிய செலவினங்களை கட்டுப்படுத்தி நாட்டின் வருமானத்தை அதிகரிக்க செய்ய அரச துறைகளுக்கும் வழங்கப்படவுள்ளது.

இந்த உதவியானது சர்வதேச ரீதியில் அமெரிக்கா மக்களினால் வழங்கும் மிகப் பெரியளவிலான நன்கொடை எனவும், இந்த உதவியின் மூலம் 1956 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு 2 பில்லியன் டொலர் நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு அமெரிக்காவின் மிகப் பெரிய உதவி.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version