எரிபொருளுக்கு டோக்கன் முறை அறிமுகம்

எரிபொருள் நிலையங்களில் மக்கள் எரிபொருளுக்காக வரிசையில் நிற்பதனை தடுப்பதற்காக இலக்கம் வழங்கும் நடைமுறை(டோக்கன்) அமுல் செய்யப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாளை (27.06) திங்கட்கிழமை முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வடக்கில் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களினால் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. வாகனங்களில் வரிசையில் நிக்காவிட்டாலும், இலக்கங்களை பெறுவதறகு வரிசையில் நிற்க வேண்டி வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் இராணுவத்தினர் இலக்கங்களை வழங்கியதாகவும், ஆனால் வரிசையில் காத்திருந்தவர்களுக்கு இலக்கம் கிடைக்கவில்லையெனவும், இடையினூடாக புகுந்து தள்ளி சென்றவர்களுக்கு இலக்கம் கிடைத்ததாகவும் வி மீடியாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கங்களை பெற்றதும் தொலைபேசியிலக்கத்தினூடாக வாகன உரிமையாளருக்கு அவர்களுடைய நேரம் தொடர்பில் அறிவித்தல் வழங்கப்படுமென அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

எரிபொருளுக்கு டோக்கன் முறை அறிமுகம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version