கொழும்பு, பேலியகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 32 வயதான ஆண் ஓருவர் கொல்லப்பட்டுள்ளார். அவருடைய இரண்டு வயது மகன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் வீதியால் சென்ற பெண் ஒருவரும் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில், தனது மனைவி மற்றும், இரண்டு வயது பிள்ளையுடன் பயணித்தவர் மீது, மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் துப்பாக்கு சூட்டை நடாத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இறந்தவர் மினுவான்கொடை பகுதியை சேர்ந்தவர் என இனம் காணப்பட்டுள்ளார்.