இரயில் சேவைகள் வழமைக்கு திரும்புவதாக அறிவிப்பு

இன்று மாலை முதல் இரயில் சேவைகள் வழமைக்கு திரும்புவதாக இரயில்வே திணைக்கள பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். இன்றும் பல இரயில்வே பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் மற்றும் ஓட்டுனர்கள் வருகை தாராமையினால் 30 இற்கும் அதிமான புகையிரதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்று காங்கேசன்துறை செல்லும் உத்தராதேவி புகையிரதம் பயணத்தை ஆரம்பிப்பதிலும் தாமதம் ஏற்பட்டது. மேலும் சில புகையிரதங்களும் இரத்து செய்யப்பட்டமையினால் முன் அறிவிப்புகளின்றி புகையிரதங்கள் இரத்து செய்யப்படுவதாக பயணிகள் குழப்பம் அடைந்ததமையினால் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் பதட்ட நிலை ஏற்பட்டது.

உத்ராதேவி புகையிரதம் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் தனது பயணத்தை ஆரம்பித்தது.

இரயில் சேவைகள் வழமைக்கு திரும்புவதாக அறிவிப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version