இலங்கைக்கு இப்போதைக்கு உதவிகள் இல்லையென ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேக்கி, தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் நேற்று தெரிவித்தாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா வி மீடியாவுக்கு உறுதி செய்துள்ளார்.
டெய்லி மிரர் இவ்வாறான செய்தியினை இன்று வெளியிட்டுள்ள நிலையில் நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஜப்பான் தூதுவருடனான சந்திப்பில் கலந்து கொண்ட தமிழரசுக் கட்சியின் தலைவரிடம் தொடர்பு கொண்ட கேட்ட போது ஜப்பான் தூதுவர் அவ்வாறு தெரிவிக்கவில்லையெனவும், சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டங்கள் நிறைவடைந்த பின்னர் இலங்கைக்கான உதவிகளை ஜப்பான் நிச்சயமாக செய்யுமென உறுதியளித்ததாக மேலும் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக இலங்கையின் இக்காட்டான சூழ்நிலைக்கு இலங்கையுடன் நெருக்கமான தொடர்பு உள்ளமையினால் கட்டாயம் உதவிகளை ஜப்பான் செய்யவேண்டுமென கூறியதாகவும், இந்த உதவிகளை செய்கின்றது போலவே தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செத்துத்துமாறு வேண்டுகோள் முன் வைத்ததாகவும் மேலும் வி மீடியாவுக்கு தெரிவிதத்தார்.
இன்று ஜப்பான் தூதுவர், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை சந்தித்ததாகவும், அந்த சந்திப்பில் ஜப்பான் தூதுவர் இலங்கைக்கான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக கூறியதாகவும் ஜனாபதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
ஊடகத்தில் வெளியான செய்தியினை இலங்கைக்கான ஜப்பான் தூதரகமம் மறுத்துள்ளது.