ரஸ்சியா எரிபொருள் நிறுவன பிரதிநிதிகள் இலங்கை வருகை

ரஸ்சியாவின் எரிபொருள் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் இருவர் இன்று மதியம் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். ரஸ்சியாவிலிருந்து இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடாத்துவதற்காக இவர்கள் வருகை தந்துள்ளனர்.

ரஸ்சியா ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் எரிபொருள் இறக்குமதி தொடர்பில், தொலைபேசி மூலமாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாவும், கடனுதவி திட்டத்தின் கீழ் எரிபொருள் இறக்குமதி செய்வது தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், சாதகமான பேச்சுவார்ததையாக அது அமைந்ததாகவும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நேற்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ரஸ்சியா அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்கள். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இவர்கள் வரவேற்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய உயர் அதிகாரிகள், அரச தலைவர்களை இவர்கள் சந்திப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உட்பட்ட சிலர் அவர்களை விமான நிலையம் சென்று வரவேற்று வந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ரஸ்சியா எரிபொருள் நிறுவன பிரதிநிதிகள் இலங்கை வருகை
Photo credit – Daily Mirror

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version