ஜூலை 09 ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்தில், ஜனாதிபதி மாளிகை, மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்குள் நுளைவவதற்கு தடை செய்யுமாறு கோரி கொழும்பு கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் உயர் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களையும், சட்டத்துக்கு முரணான நடவடிக்கைகளை தடுக்க அனுமதியளிக்கப்பட்ட முன் ஏற்பாடுகளை செய்யுமாறும் நீதிபதி கமிந்த பெரேரா பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
