ஜூலை 09 இன்று கொழும்பில் நடைபெறும் போராட்டங்கள் தொடர்பான செய்திகள்.
கொழும்பு காலி முகத்திடல் மற்றும் கோட்டை சதாம் வீதி ஆகிய பகுதிகள் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பொலிசாரினால் அமைக்கப்பட்டுள்ள வீதி தடைகளை தகர்த்து ஜனாதிபதி மாளிகையினை நோக்கி நகர மக்கள் முயற்சிது வருகின்றனர்.
இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது பொலிசார் நீர் தாக்குதல் மற்றும் கண்ணீர் புகைக் குண்டு தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரையில் நடைபெற்ற மோதல்களில் பொதுமக்கள் 5 பேரும், பொலிசார் இருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.