பிரதமரின் அலுவலகம் போராட்டத்தில் ஈடுபடும் மக்களினால் கைப்பற்றப்பட்டுள்ளது. காலை முதல் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள், பிரதமர் அலுவலத்துக்குள் நுழைந்துள்ளார்கள்.
பொலிஸ், விசேட அதிரடிப்படையினர், முப்படைகள் என பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களது தடைகளையும் உடைத்துக்கொண்டே மக்கள் பிரதமர் அலுவலகத்துக்குள் சென்றுள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் தற்சமயம் பிரதமர் அலுவலகத்துக்குள் சென்றுள்ளனர்.
