மேல், சபரகமுவ மற்றும் வடமேற்கு பிரதேசங்களிலும் கண்டி, நுவரெலியா ,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளைய தினம் (05.09) பலத்த மழை ஏற்பட வாய்ப்புள்ளதாக இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்தும், சபரகமுவ பிரதேசத்திலும் மற்றும் கண்டி,நுவரெலியா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் 75 மில்லி மீட்டரை தாண்டி பலத்த மழை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மத்திய மலை நாட்டில் மேற்கு கரையில் மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.