எலிசபெத் மகாராணியின் இறப்புக்கு ஜனாதிபதி உயர்ஸ்தானிகராலயத்தில் இரங்கல்

கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு இன்று (11.09) முற்பகல் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் (Sarah Hulton) வரவேற்றார்.

பின்னர் அங்கு வைக்கப்பட்டுள்ள விசேட நினைவுப் புத்தகத்தில் அனுதாபக் குறிப்பை எழுதிய ஜனாதிபதி, 07 தசாப்தங்களாக இரண்டாம் எலிசபெத் மகாராணி, உலக மக்களுக்கு ஆற்றிய அளப்பரிய சேவையை நினைவுபடுத்தினார்.

எதிர்வரும் 19ஆம் திகதி லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்குகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version