இலங்கை வடக்கில் சீன இராணுவம்; தமிழகத்துக்கு அச்சுறுத்தல் – இந்திய செய்தி

இலங்கையின் வடக்கு கடற்பகுதிகளில் சீன இராணுவத்தினது நடமாட்டம் காணப்படுவதாகவும், அதன் காரணமாக தமிழகத்துக்கு பாதுகாப்பு அச்சறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இந்தியாவின் ஊடகம் த ஹிந்து இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய மத்திய புலனாய்வு துறை இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக ஹிந்து மேலும் தெரிவித்துள்ளது. கடல் வெள்ளரிக்காய் பயிரடல் எனும் திட்டத்தின் கீழ் சீனர்கள் இலங்கையின் வடக்கு கடற் பகுதிகளில் அதிகமாக நடமாடுவதாகவும், அவர்களிடம் அதி உயர் தொழில்நுட்ப சாதனங்கள் காணப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் தமிழக பாதுகாப்பு தொடர்பிலும், கடல் பாதுகாப்பு தொடர்பிலும் மத்திய புலனாய்வு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

செய்மதி, ட்ரோன், தொடர்பாடல் சாதனங்கள் உட்பட பல உயர் தொழிநுப்ட நவீன கருவிகளை அவர்கள் வைத்திருப்பதாகவும், அதன் காரணமாக தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறும், கரையோர மாவட்டங்களில் மிகவும் உன்னிப்பாக பாதுகாப்பினை கண்காணிக்குமாறும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தோடு இலங்கையின் அரசியல் கட்சி ஒன்றின் உதவியுடன் சீனாவை சேர்ந்தவர்கள் கடல் வழியாக சாதாரண படகுகளில் இந்தியாவுக்கு இரகசியமாக வருகை தந்துள்ளார்கள் எனவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் செய்மதி கண்காணிப்பு, ரொக்கெட் மற்றும் செய்மதி ஏவல் போன்றவற்றுக்காக பாவிக்கும் சீனாவின் கப்பலான யுவன் வோங் 05 தரித்து நின்றமை தொடர்பிலும், தமிழக தெற்கு கடற்கரை பகுதிகளில் கடல் துறைமுகம் மற்றும் அணு ஆளை நிறுவல் போன்றவை தொடர்பிலும் அக்கறை கொள்ளுமாறும் தேவையான பாதுகாப்பினை செயற்படுத்துமாறும் இந்திய மத்திய புலனாய்வு துறை அறிவுறுத்தியுள்ளது.

இலங்கையின் வட பகுதிகளான முல்லைத்தீவு, பருத்தித்தீவு, அனலைதீவு, மீசாலை, சாவகச்சேரி ஆகிய பகுதிகளில் அடங்கலாக பல பகுதிகளில் சீனர்களின் நடமாட்டங்கள் அவதானிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிப்பதாகவும், இதன் காரணமாக தமிழ் மீனவர்களின் ஒரே வாழ்வாதாரமான மீன் பிடி தொழில் பாதிப்புக்குளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அத்தோடு இவ்வாறான செயற்பாடுகள் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மீது இந்தியா கொண்டுள்ள நல்லுறவு மற்றும் அக்கறை பாதிப்புக்குளாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ் மக்கள் அச்சப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான சீன தூதுவர் அடிக்கடி கடற்கரை பகுதிகளுக்கு செல்வதும், வெள்ளரி அறுவடை தொடர்பிலனா கண்காணிப்பு என தெரிவித்து ட்ரோன் கமரா மூலம் கண்காணிப்பது தொடர்பிலும் சதேகங்கள் வலுப்பெற்றதாகவும், இலங்கைக்கான சீனவர்களின் வருகை அதிகரித்து வருவதனை மறுக்க முடியாதெனவும் தமிழக கடற் பாதுகாப்பு துறையின் தலைமை அதிகாரி உதவி பொலிஸ் ஆணையாளர் சந்தீப் மிட்டால் தெரிவித்ததாக்க ஹிந்துவின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை சீனாவில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கு சீனா புலமைப்பரிசில்களை வழங்குவதாகவும், அதன் மூலம் எதிர்காலத்தில் அந்த மாணவர்களை தங்களது திட்டங்களுக்கு பாவிப்பதற்காக எனவும் மேலும் மிட்டால் குற்ற்றம் சுமத்தியுள்ளார்.

Social Share

Leave a Reply