கட்டாரில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண காற்பந்தாட்ட தொடரில் பெல்ஜியம், கனடா அணிகளுக்கிடையிலான போட்டியில் பெல்ஜியம் அணி 1-0 என வெற்றி பெற்றது.
போட்டி ஆரம்பித்து 11 ஆவது நிமிடத்தில் கனடா அணிக்கு கிடைத்த பனால்டியினை கோலாக டேவிஸ் மாற்ற தவறியமையினால் பலமான பெல்ஜியம் அணியுடன் தோல்வியினை சந்திக்க வேண்டிய நிலை கனடா அணிக்கு ஏற்பட்டது.
தரப்படுத்தல்களில் இரண்டாமிடத்தில் காணப்படும் பெல்ஜியம் அணி இந்த வெற்றியின் மூலம் குழு E இல் முதலிடத்தை தனதாக்கி கொண்டது.
பெல்ஜியம் அணி சார்பாக மிச்சி பசுவாயி 44 ஆவது நிமிடத்தில் கோலினை அடித்து முன்னிலையினை பெற்றுக்கொடுத்தார்.
கனடா அணி மிகவும் சிறப்பாகவும், பெல்ஜியமணிக்கு சவால் விடுக்கும் வகையிலும் விளையாடியது. கோல் அடிக்கும் வாய்ப்புகளை தவறவிட்டமையே அவர்களின் தோல்விக்கு முக்கியமான காரணமாக அமைந்தது.