முன்னாள் காலி நீதிபதிக்கு பிடிவிறாந்து

காலி மேல் முறையீட்டு நீதிமன்றின் முன்னாள் நீதிபதி திருமதி D.S மெறிஞ்சியாராச்சியினை கைது செய்ய திறந்த பிடிவிறாந்து கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது. அவர் நீதிபதியாக கடமையாற்றிய கால பகுதியில் குறைந்த தண்டபணத்தை விதித்தமைக்காக அவருக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 04 மற்றும் ஐந்தாம் திகதிகளில் நடைபெற்ற வழக்குகளில் 7,500 தண்டத்துக்கு பதிலாக 1500 ரூபாவும், 5000 ரூபாவுக்கு பதிலாக 1500 தண்டம் அறவிட்டமையினால் அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் குற்றங்களைச் செய்தமைக்காக முன்னாள் காலி நீதவானுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் ஐந்து வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்திருந்தது. இருப்பினும் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் நீதிபதி வழக்கிற்கு வருகை தராத காரணத்தினால் அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் நீதிபதி இலங்கையினை விட்டு வெளிநாடு சென்றுள்ளார் என நீதிமன்றத்துக்கு மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply