லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாம் நாளான இன்றைய முதற் போட்டி, ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஜப்னா கிங்ஸ், தம்புள்ள ஓரா அணிகளுக்கிடையில் ஆரம்பித்துள்ளது.
ஜப்னா கிங்ஸ் அணி முதற் போட்டியில் வெற்றி பெற்று பலமான நிலையில் களமிறங்குகிறது. இலங்கை அணியின் தலைவர் தஸூன் சாணக்கவின் தலைமையில் தம்புள்ள ஓரா அணி தனது முதற் போட்டியில் இன்று களமிறங்கியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ள ஓரா அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.
அணி விபரம்
ஜப்னா கிங்ஸ்
ஜப்னா கிங்ஸ்
திசர பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ,அஷான் ரண்டிக, தனஞ்சய டி சில்வா, ஜேம்ஸ் புல்லர், சொஹைப் மலிக், சமான் கான், டுனித் வெல்லாளகே, மஹீஸ் தீக்ஷண, விஜயகாந்த் விஜாஸ்காந், சதீர சமரவிக்ரம.
தம்புள்ள ஓரா
தஸூன் சாணக்க, ஷெவான் டானியல், ஜோர்டான் கொக்ஸ், பானுக்கா ராஜபக்ஷ, ரமேஷ் மென்டிஸ், லஹிரு மதுஷங்க, சிகான்டர் ரஷா, லஹிரு குமாரா, சதுரங்க டி சில்வா, நூர் அஹமட், பவுல் வன் மீகறன்