பலாலி – சென்னை விமான போக்குவரத்து ஆரம்பம்!

Jaffna - Chennai flight started. Palali Airport. Jaffna Airport:

பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு வருடங்களின் பின்னர் இன்று (12.12) முதல் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி இன்று காலை சென்னையில் இருந்து இந்தியாவின் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் வந்தடைந்தது.

கொரோனா தொற்று பரவல் மற்றும் பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் காரணமாக பலாலியில் இருந்து இந்தியாவுக்கான விமான பயணங்கள் இடைநிறுத்தப்பட்டன.

பலாலி விமான நிலையம், 2,250 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டது. எனவே தற்போது புதிய விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து பலாலிக்கான விமானங்கள் வாரத்தின் ஒவ்வொரு திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் சேவையில் ஈடுபடவுள்ளதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவையினை அலயன்ஸ் எயார் நிறுவனம் செயற்படுத்துகிறது. அந்த விமான சேவையின் 9I 101 எனும் விமானமே இன்று காலை யாழ்ப்பாணம் விமான நிலையத்தை வந்தடைந்து, வருகை தந்த விமானத்துக்கு வட மாகாண ஆளுநர், இந்திய தூதரக அதிகாரிகள், யாழ் விமான நிலைய அதிகாரிகள், விமான சேவை அதிகாரிகள் என பலரும் வைபவ ரீதியாக வரவேற்ற்ப்பு வழங்கினர்.

Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version