கண்டி – காலி போட்டி ஆரம்பம்

யாழ் அணி அதிரடி வெற்றி. விஜயஸ்காந்த் ஏன் நீக்கப்பட்டார்?  காலி அணிக்கு முதல் வெற்றி. V Media

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் கண்டி பல்கொன்ஸ் மற்றும் கோல் க்ளாடியேற்றஸ் அணிகளுக்கிடையிலான போட்டி கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் ஆரம்பித்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள கோல் க்ளாடியேற்றஸ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.

கண்டி அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது. காலி அணி மூன்று போட்டிகளில் ஒரு வெற்றியினை பெற்று மூன்றாமிடத்தில் காணப்படுகிறது.

போட்டி ஆரம்பம் வேளையில் இதமான நல்ல வாநிலை காணப்படுகிறது. அதிகளவில் வெயில் இல்லை. மாலை வேளைகளில் மழை வரலாம் என கூறப்படுகிறது. ஆனால் மழைக்கான வாய்ப்புகள் குறைவே.

அணி விபரம்

கோல் கிளாடியேட்டர்ஸ்
குஷல் மென்டிஸ், நுவனிது பெர்னாண்டோ, தனுக்க டாபரே, லஹிரு உதான, அஸாம் கான் , இப்திகார் அஹமட், இமாட் வசீம், நுவான் துஷார, நுவான் பிரதீப், வஹாப் ரியாஸ், லக்ஷன் சன்டகன், அஸாம் கான்

கண்டி பல்கொன்ஸ்

வனிந்து ஹஸரங்க, பத்தும் நிஸ்ஸங்க, அன்றே பிளட்சர், கமிண்டு மென்டிஸ், அஷேன் பண்டாரா, சாமிக்க கருணாரட்டன, கார்லோஸ் ப்ராத்வைட், இசுரு உதான, சகூர் கான், அஷேன் டானியல், அஷான் பிரியரஞ்சன்

கண்டி - காலி போட்டி ஆரம்பம்
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version