இந்த ஆண்டு பூமி சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் நாள் இன்றாகும்
(04 .01) என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பூமி நீள்வட்டப் பாதையில் மிக நெருக்கமாக சூரியனைச் சுற்றி வருவதே இதற்குக் காரணம் என வானியலாளர்கள் கூறுகின்றனர்.
“பெரிஹேலியன்” என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு இலங்கை நேரப்படி இன்று (04 .01) இரவு 9.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது. எனினும் அநேரத்தில் மற்றும் அதற்கு முன்னரும், பின்னரும் பூமி சூரியனுக்கு மெகா நெருக்கமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, பூமியிலிருந்து சூரியனுக்கான தூரம் சுமார் 150 மில்லியன் கிலோமீட்டர்கள், ஆனால் இன்று பூமி சூரியனுக்கு சுமார் 5 மில்லியன் கிலோமீட்டர்கள் நெருக்கமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வெயிலின் தாக்கம் சற்று அதிகரிப்பதால் சருமம் தொடர்பான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானியலாளர் அனுர சி. பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் வெளியில் செல்லும்போது வெயிலுக்கு குடையை பயன்படுத்துவதும், அதிகளவில் தண்ணீர் அருந்துவதும் பரிந்துரைக்கப்படுகிறது.
