மறைந்த முன்னாள் திருத்தந்தைக்காக இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி!

முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆவது பெனடிக்ட் திருத்தந்தைக்காக இரங்கல் தெரிவிப்பதற்கு கொழும்பு அபோஸ்தலிக்க தூதரகத்திற்கு ஜனாதிபதி விஜயம் செய்துள்ளார்.

முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16ம் பெனடிக்ட் திருத்தந்தை இறைவனடி சேர்ந்ததையிட்டு அவருக்காக இரங்கல் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (04.01) முற்பகல் கொழும்பிலுள்ள அபோஸ்தலிக்க தூதரகத்திற்கு விஜயம் செய்தார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான வத்திக்கான் அபோஸ்தலிக்க தூதுவர் புனித பிரையன் உடேக்வே ஆண்டகையைச் சந்தித்த ஜனாதிபதி, அவருடன் சிறு உரையாடலில் ஈடுபட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கு வைக்கப்பட்டுள்ள விசேட நூலில் குறிப்பொன்றையிட்டதுடன், பாப்பரசர் 16ம் பெனடிக்டின் புகைப்படத்திற்கும் அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த முன்னாள் திருத்தந்தைக்காக இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version