இந்திய வெளியுறவு செயலாளர், த.மு.கூ சந்திப்பு

இந்திய வெளியுறவு செயலாளர் ஹரிஷ் வர்மன் ஸ்ரீங்லா , மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு இடையிலான சந்திப்பு நேற்று இரவு நடைபெற்றது.

இந்த சந்திப்பின்போது , 1987ன் இலங்கை-இந்திய ஒப்பந்தம், 1964ன் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் ஆகியவற்றின் அடிப்படைகள் மீறப்பட்டுள்ளன. 13ம் திருத்த சட்டத்தின் அடிப்படையில் மாகாண சபைகளையும், 16ம் திருத்த சட்டத்தின் அடிப்படையில் தமிழ் மொழி உரிமைகளையும் அமுலாக்க அழுத்தம் கொடுங்கள் என்ற கோரிக்கையை முன் வைத்ததாக தமிழ. முற்போக்கு கூட்டணியின் தலைவர், பாரளுமன்ற உறுப்பின் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு, மத்திய, மேல், ஊவா, சப்ரகமுவ மாகாண சபைகள் உட்பட அனைத்திற்கும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். 16ம் திருத்தத்தின் அடிப்படையில் தமிழ் நிர்வாக, கல்வி, நீதிமன்ற மொழியாக அமுல் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டதாக மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், இராதாகிருஷ்ணன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயலாளர் சந்திரா சாப்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்திய வெளியுறவு செயலாளர், த.மு.கூ சந்திப்பு

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version