தென்கிழக்கு வங்கக்கடல் வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலை படிப்படியாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி, பின்னர் அடுத்த சில நாட்களில் புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினரிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (08.05) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தற்போதைய வானிலை குறித்து அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.