ஜப்பானின் டோக்கியோ அருகே இன்று (11.05) காலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலநடுக்கம் 5.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதுடன், அதிக பகுதிகளில் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.