ஈக்வடோர் நாட்டின் ஜனாதிபதி வேட்பாளரான பெர்னாண்டோ வில்லவிசென்சியோ சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று, கூட்ட முடிவில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற போதே அவர் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அந்நாட்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு எதிர்வரும் 20ம் திகதி இடம்பெறவுள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்திற்கு ஈக்வடோர் நாட்டின் தற்போதைய ஜனாதிபதி Guillermo Lasso கண்டனம் தெரிவித்துள்ளதுடன், குற்றவாளிகள் எந்த நிலையில் இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அந்த நாட்டில் எதிரவசரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எட்டு வேட்பாளர்களுக்கும் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.