சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது!

லங்கா சதொச நிறுவனம் இன்று (17.08) முதல் அமுலுக்கு வரும் வகையில் 09 வகையான பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி 400 கிராம் இலங்கை பால் மா பாக்கெட் ஒன்றின் விலை 29 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 970 ரூபாவாகும்.

அத்துடன் 1 கிலோ சோயா இறைச்சியின் (மொத்த விற்பனை) விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 625 ரூபாவாகும்.

இதேவேளை, 1 கிலோ பாஸ்மதி அரிசியின் புதிய விலை 675 ரூபாவிற்கும், பிரவுன் சர்க்கரையின் விலை கிலோ 350 ரூபாவிற்கும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

அதேபோல் ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை 325 ரூபாவாகவும், உளுந்து ஒரு கிலோ 555 ரூபாவாகவும், ஒரு கிலோ பூண்டு 630 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ சிவப்பு பச்சை அரிசியின் புதிய விலை 147 ரூபாவாக உள்ளதுடன், அதன் விலையை 2 ரூபாவினால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply