மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (17.08) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை காணப்படுவதுடன், கொழும்பில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேற்கு மாகாணங்கள், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மணிக்கு 40-45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
கடற்பரப்புகள் சற்று கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.