உலக கிண்ண சதுரங்க போட்டி தொடரின் இறுதிப் போட்டியின் இரண்டாவது போட்டி நெற்று(23.08) அஸர்பைஜானில் நடைபெற்றது. இந்தியா தமிழகத்தின் இள வயது வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா உலகின் முதல் நிலை வீரர் மக்னஸ் கார்லஸன் உடன் மோதியிருந்தார். அந்தப் போட்டி சமநிலையில் நிறைவைடைந்தது. முதற் போட்டியும் சமநிலையில் நிறைவடைந்த நிலையில் இன்று உலக சம்பியனை தெரிவு செய்வதற்கான போட்டி நடைபெறவுள்ளது.
நேற்று நடைபெற்ற போட்டி வேகமாக நிறைவடைந்துள்ளது. 1 மணி நேரத்துக்குள் இரு வீரர்களும் 30 நகர்வுகளை செய்த நிலையில் இருவரது சம்மதத்தோடு போட்டி சமநிலைக்கு கொண்டு வரப்பட்டது.
இன்று நடைபெறும் போட்டி குறுகிய கால வேகமான போட்டியாக நடைபெறுமெனவும், அதில் வெற்றி பெறுபவர் உலக சம்பியனாக தெரிவு செய்யப்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா சார்பாக உலகக்கிண்ண சதுரங்க போட்டியில் பங்குபற்றும் வயது குறைந்த வீரராக தனது பெயரை பதிவு செய்துள்ளார் பிரக்ஞானந்தா. உலக அளவில் வயது குறைந்த மூன்றாவது வீரராக தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
இன்றைய போட்டியை இந்தியாவும், உலக தமிழ் மக்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பிரக்ஞானந்தா 2005 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 10 ஆம் திகதி பிறந்தவர் ஆவார். 18 வயதை பூர்த்தி செய்து இரண்டு வாரங்களை கடந்துள்ளார்.