நாட்டை விட்டு வெளியேறவுள்ள 700இற்கும் மேற்பட்ட மருத்துவர்கள்!

டாக்டர் ஆஃப் மெடிசின் (MD) முடித்த மொத்தம் 785 மருத்துவர்கள் வரும் மாதங்களில் வெளிநாட்டுப் பயிற்சிக்காக வெளியேற உள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில் வெளிநாட்டில் பயிற்சியை முடித்த வைத்தியர்கள் மீண்டும் நாட்டிற்கு திரும்புவார்களா என்ற கவலை  ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

நம்பகமான வட்டாரங்களின்படி, மொத்தம் 822 மருத்துவர்கள் தற்போது வெளிநாடுகளில் பயிற்சி பெற்று வருகின்றனர், 632 பேர் MD தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.  

நாட்டின் நிலைமையைக் கருத்தில் கொண்டு, 822 மருத்துவர்களும் நாடு திரும்புவது சாத்தியமில்லை என்று மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

 எவ்வாறாயினும், தற்போதுள்ள வைத்தியர்கள் மற்றும் வைத்திய நிபுணர்களை தக்கவைக்க நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version