கோழி இறைச்சியின் விலையில் மாற்றம்!

1 கிலோ கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவினால் குறைக்க கோழிப்பண்ணை தொழில்துறையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் நேற்று (25.08) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர்கள் குறித்த இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.

இலங்கை அரசாங்கம் 1 கிலோ சோளத்திற்கான இறக்குமதி வரியை 75 ரூபாவிலிருந்து 25 ரூபாவாக குறைத்துள்ளதாகவும், இந்த அனுகூலத்தை நுகர்வோருக்கு வழங்குவதே தமது நோக்கம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version