வெளிநாட்டு உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட புகையிரத கடவைகளில் மின்சார சமிக்ஞை அமைப்புகளை நிறுவும் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட 188 அமைப்புகளில் 94 அமைப்புகள் இதுவரை செயலிழந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதற்காக செலவிடப்பட்ட ஐநூறு மில்லியன் ரூபாய் வீணாகியுள்ளதாக அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக புகையிரத கடவைகளில் ஏற்பட்ட பெரும்பாலான விபத்துக்களுக்கு புகையிரத கடவைகளில் பாதுகாப்பு கதவுகள் இல்லாமை மற்றும் மின்சார சமிக்ஞைகள் மற்றும் மணிகள் செயற்படாதமையே காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், 10 வீதி பாதுகாப்பு அமைப்புகள் முறையாக சோதனை செய்யப்பட்டு ரயில்வே திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவில்லை என்பதையும் கணக்காய்வு அலுவலகம் வெளிப்படுத்தியுள்ளது.