திருகோணமலையில் பிக்குகள் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை- நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த விகாரையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பிக்குகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

குறித்த விகாரை நிர்மாணிப்பதால் காணப்படும் பிரச்சினை குறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குகளுக்கு அரச அதிபர் அலுவலகத்தில் வைத்து ஆளுநரால் விளக்கம் அளிக்கப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்ட செயலகத்தில், திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில், ஆர்ப்பாட்ட காரர்களால் இக்கூட்டம் இடைநிறுத்தப்பட்டது.

திருக்கோணமலை அனைத்து இன மக்களும் வாழும் ஒரு சமூகமாகும். பிக்குகளின் செயற்பாடுகள் போல் ஏனைய இனத்தவரும் இவ்வாறானதொரு செயற்பாடுகளை முன்னெடுப்பார்களானால் அதற்கு நீங்களே ஒரு முன்னுதாரணமாக செயற்படுவீர்கள் என தெரிவித்தார்.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்,
பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட கடிதத்தை மீளப்பெற்றாலும், பிரதேச சபையின் அனுமதியின்றி எந்த ஒரு கட்டுமானப்பணிகளும் முன்னெடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version