எரிபொருட்களின் விலை அதிகரிப்பை தொடர்ந்து பேருந்து கட்டணங்களின் விலையை திருத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி நாளை (09.02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்களை அதிகரிக்க ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
பேருந்து கட்டணமானது 4.01 சதவீதத்தால் உயரும் எனவும், குறைந்தபட்ச கட்டணம் மாறாமல் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பேருந்து கட்டண திருத்தத்திற்கு ஏற்ப, அதிவேக நெடுஞ்சாலை பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.