போலியான ஆவணங்களை பயன்படுத்தி வாகன இறக்குமதி

போலியான ஆவணங்களை பயன்படுத்தி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சிறிய கூப்பர் ரக வாகனமொன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த மோசடி சம்பவம் நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்றமை தெரியவந்துள்ளது. 

இவ்வாறாக 400இற்கும் மேற்பட்ட வாகனங்கள், இறக்குமதி செய்யப்பட்டு சட்டவிரோதமான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

KE-3845 என்ற இலக்கம் கொண்ட இந்த வாகனம் இலங்கை சுங்கத்தின் அனுமதியின்றி இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்பில் போலியாக பதிவு செய்யப்பட்டுள்ளதுடன்,   2.5 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டத்தை அரசாங்கத்திற்கு ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த வாகனம் கடந்த 2007 ஆம் ஆண்டு போலி ஆவணங்களை பயன்படுத்தி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு 2015 ஆம் ஆண்டு முச்சக்கர வண்டியாக பதிவு செய்யப்பட்டதாக கொழும்பு பிரதான நீதவானிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version