ஆதித்தியா L1  விண்கலத்தை இன்று ஏவும் இந்தியா!

இந்தியா ஆதித்தியா L1  விண்கலத்தை இன்று (02.09) காலை 11. 50இற்கு விண்ணில் செலுத்தவுள்ளது. 

சந்திராயன் விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய பிறகு இந்தியா தனது அடுத்த முயற்சியாக சூரியனை இலக்கு வைத்துள்ளது. 

இதன்படி ஆதித்தியா  L1  விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து செலுத்தவுள்ளது. இதற்கான கவுண்டவுன்கள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளன. 

4.5 ஆண்டுகள் பழமையான நட்சத்திரமான சூரியனை நெருங்க 04 மாதங்கள் எடுக்கும் எனக் கூறப்படுவதுடன், சூரியனை ஆய்வு செய்வதன் மூலம் தற்போது பூமியில் நிலவும் காலநிலை மாற்றத்திற்கான காரணங்களை கண்டறிய முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவின் இந்த முயற்சி வெற்றிபெரும் பட்சத்தில் சூரியனை ஆய்வு செய்த முதல் நாடாக இந்தியா வரலாற்றில் இடம்பிடிக்கும்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version