மலையக மக்களின் இருநூறு வருட வரலாற்றை நினைவுகூர்ந்து மலையக இளைஞர்களுக்கான மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி செப்டெம்பர் மாதம் 24ம் திகதி காலை 8 மணிக்கு தலவாக்கலை தொடக்கம் ஹட்டன் வரை இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.
18 தொடக்கம் 35 வயதிற்கும் இடைப்பட்ட ஆண்கள் இந்த மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றலாம்.
போட்டியில் பங்கேற்க உரிய மருத்துவ தகுதிச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, கிராம சேவகர் உறுதி ஆகிய பிரதிகளை இணைத்து முழுப் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் என்பவற்றை தெளிவாக குறிப்பிட்டு சுயமாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
மலையகம் 200=20Km மரதன் ஓட்டப் போட்டி இல,96 திம்புள்ள வீதி ஹட்டன். என்ற முகவரிக்கு செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னதாக உங்கள் விண்ணப்பங்களை அனுப்பிவைக்க முடியும்.
பிந்திக் கிடைக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரிசு விபரம் வருமாறு,
1ம் பரிசு – 50,000 ரூபா பணம் – கேடயம், தங்கப் பதக்கம், சான்றிதழ்
2ம் பரிசு – 30,000 ரூபா பணம் – கேடயம், வெள்ளிப் பதக்கம், சான்றிதழ்
3ம் பரிசு – 20,000 ரூபா பணம் – கேடயம், வெண்கலப் பதக்கம், சான்றிதழ்
4 தொடக்கம் 10 வரையான வெற்றியாளர்களுக்கு ஆறுதல் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். போட்டியில் பங்குபற்றி 20 கிலோ மீட்டர் தூரத்தை ஓடி முடிக்கும் ஏனைய அனைத்து போட்டியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது.
தொடர்புகளுக்கு
0771485577/0766928419