வாரியபொல, மாதம்பே பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்று லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில், இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
இதில் மோட்டார் சைக்களில் பயணித்த தந்தையும், மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 48 மற்றும் 16 வயதுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தின் பின்னர், லொறியின் சாரதி தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.