அரசாங்கம் தேர்தலை நடத்தாது!

தோல்வி பயம் காரணமாக அரசாங்கம் தேர்தலை நடத்தாது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (05.09) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “ரணில் விக்ரமசிங்கவும் அவருடைய மாமாவான ஜே.ஆர்.ஜயவர்தனவும் தேர்தல் நடத்தாமல் தேர்தல் பத்திரங்களை ஒதுக்கி வைப்பதில் கின்னஸ் சாதனைக்கு சரி சமமாக உரித்துடையவர்கள்.

தேர்தல் வைக்கமாட்டார்கள் காரணம் அரசாங்கம் தோற்பது விருப்பம் இல்லை. தேர்தலை எப்படியும் நடத்த மாட்டார்கள். நாம் தான் நடத்த வைக்க வேண்டும். தேர்தல் நடத்தும் வரையில் எங்கள் போராட்டத்தை நிறுத்த மாட்டோம்.  நாங்கள் தேர்தலுக்கு தயாராக இருக்கின்றோம். அரசாங்கம் தயாராக இல்லை” எனக் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version