குண்டுதாக்குதல் விவகாரம் : சர்வதேச விசாரணையை நாடவும் தயார்!

பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் செனல் 04 ஊடகம் வெளியிட்ட காணொலி தொடர்பில் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ள அவதானம் செலுத்தியுள்ளோம் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் இன்றைய (05.09) அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ”இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு ஊடாக விசாரணைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேவைப்பட்டால், சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ளவும் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏப்ரல் 21 குண்டுதாக்குதல் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதில் அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்காது எனத் தெரிவித்த அவர், ஜெனிவா கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளதன் பின்னணியில் தான் இந்த காணொலி வெளியாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version