உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் புதிய தீர்மானம்!

எந்த காரணத்திற்காகவும் உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைக்க முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படுவதனால் , சாதாரணதர பரீட்சைகள் மற்றும் 2024ம் ஆண்டுக்கான பாடசாலை பாடத்திட்டத்தின் நிறைவில் பாதிப்பு ஏற்படும் என்பதால் உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைக்க முடியாது என கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர உள்ளிட்ட அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், உயர்தரப் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும், தேர்வுகளை மீண்டும் பிற்போடுவது நியாயமற்ற செயல் என்றும் அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version