”உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை திசைத்திருப்ப வேண்டாம்” – பிள்ளையான்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் விசாரணைகளை திசை திருப்பும் நோக்கிலேயே “செனல்-4“ காணொளியும் அசாத் மௌலானவின் கருத்தும் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தன் எனப்படும் பிள்யைான் தெரிவித்துள்ளதுடன், காணொளியில் வெளியிடப்பட்டுள்ள கருத்துகளையும் நிராகரித்துள்ளார்.

அத்துடன், நாட்டில் மீண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்ததை போன்றதொரு சூழலை உருவாக்க முற்படுகின்றனரா என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (06,.09) உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னுடன் இணைந்து பயணித்திருந்த அசாத் மௌலானா, வெளிநாடொன்றில் தஞ்சமடைந்துள்ளதால், அவரது புகலிட கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள பல போலியான பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறார் எனவும், அவர் சிக்கல்களுக்கு தீர்வுகாண குடும்பத்துடன் வெளிநாடு செல்ல வேண்டுமென கூறி அவர் விலகிசென்று ஒருவருடகாலம் கடந்துள்ளது எனவும் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

செனல்-4 வெளியிட்டுள்ள இந்த காணொளி பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கியுள்ளதுடன், செனல்-4 தொலைக்காட்சி கடந்தகாலத்தில் இலங்கையில் என்ன செய்தது என்பதையும் அனைவரும் நன்கு அறிவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இந்த தாக்குதல்களால் நாட்டில் இரத்த ஆறு ஓடியதுடன், கிழக்கு மாகாண மக்கள் இதில் பெரிதும் பாதிக்கப்படட்டுள்ளதாகவும், இந்த தாக்குதலை ஐ.எஸ். அமைப்புதான் மேற்கொண்டதாக அந்த அமைப்பின் மறைந்த தலைவர் அல் பக்தாதி தெரிவித்திருந்ததாகவும், அவர்களின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான “அமாத்“ என்ற இணையத்தளமும் தாக்குதல்களுக்கு பொறுப்பை ஏற்றிருந்தாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இன்னமும் தீர்வுகள் கிடைக்காதுள்ள நிலையில் அசாத் மௌலான, இந்த விடயத்தை மறுபக்கம் திருப்ப பார்க்கிறார் எனவும் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ். அமைப்பு மிகவும் ஒரு கடுமையான அதேவேளை, அதிகளவான புத்திசாளிகளை கொண்ட அமைப்பாகும் எனவும், சிறியா, ஈராக் போன்ற பகுதிகளில் போர்களை முன்னெடுத்து தோல்விடைந்த அமைப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலத்தில் கற்றுக்கொண்ட பாடங்களை அடிப்படையாக கொண்டு பொய்யான விடயங்களை பேசிக்கொண்டிருக்க கூடாது எனவும், வெளிநாடு செல்பவர்கள் அங்கு தமது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள பொய்யான தகவல்களை வெளியிடுவாதாவும், அதையே இவரும் செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதை வைத்துக்கொண்டு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மை விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்றும் பதவிகளை பறிக்க வேண்டும் என்றும் கூறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தற்போது வெளியாகியுள்ள காணொளி தொடர்பில் தம் எதுவித்திலும் அச்சமடைய போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Social Share
Facebook
Twitter
Reddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version