மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குவது குறித்து கலந்துரையாடல்!

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான பொறிமுறை தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டும் அல்ல பெருந்தோட்டங்களில் உள்ள அனைவருக்கும் காணி உரிமை அவசியம் என இதன்போது தெளிவாக எடுத்துரைத்ததாக தெரிவித்துள்ளார்.

அதற்கான பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில், அது துரிதப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்துவத்தையும் வலியுறுத்தியதுடன், பெருந்தோட்டப்பகுதிகளில் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கும் காணி உரித்து பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்த கலந்துரையாடலில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண, நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வன் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்ற இச்சந்திப்பில் எனது அமைச்சின் செயலாளர் எஸ்.சமரதிவாகர, காணி அமைச்சின் செயலாளர், காணி மறுசீரமைப்பு குழுவின் தலைவர், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, காணி ஆணையாளர், மற்றும் துறைசார் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version