The Finance நிதி வைப்பாளர்களுக்கு நீதி கிடைக்கவில்லை!

The Finance நிறுவனத்தைச் சேர்ந்த 6400 வைப்பாளர்களின் 11.6 பில்லியன் வைப்பு மற்றும் 5.5 பில்லியன் சொத்துக்கள் வைப்பு இருந்தும் நிதியமைச்சோ அல்லது மத்திய வங்கியோ The Finance நிதி வைப்பாளர்களுக்கு நீதியை வழங்கவில்லை என்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தாம் முன்னரும் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (08.09) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர இவ்வாறு கூறினார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், ” UB Finance நிறுவனத்தின் 2650 பைப்பாளர்களுக்கும் கடுமையான அநீதிக்கு ஆளாகியுள்ளனர் என்றும், இதில் 48 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும், இவர்களின் காணி,சொத்துக்கள்,நட்டஈடு போன்றவற்றை இங்கு வைப்பிலிடுவதில் பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்நிறுவனங்கள் அனைத்தும் மத்திய வங்கியின் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் என்றும்,இன்னும் இந்நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்த அவர், இந்த வைப்புத்தொகையாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ETI நிறுவனத்தில் 27000 வைப்பாளர்கள் உள்ளனர் . அவர்களில் ஒரு பகுதியினருக்கு இழப்பீடு வழங்கப்பட்டாலும் 5000 பேருக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக நிதியமைச்சரிடம் இருந்து எந்த பதிலோ அல்லது தீர்வு வந்தபாடில்லை என்றும்,
எனவே இந்த மூன்று நிறுவனங்களுக்கும் தெளிவான தீர்வு தேவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version