ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான முக்கிய போட்டி ஆரம்பித்துள்ளது. இன்று வெற்றி பெறுமணிக்கு இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்புகள் அதிகமுள்ளன.
இந்தியா அணி அடுத்தடுத்த தினங்களில் போட்டிகளில் விளையாடுகின்றது. இது அவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். இலங்கை அணி தொடர்ச்சியாக விளையாடி 13 வெற்றிகளை பெற்றுள்ளமை அணிக்கு பலமாக அமைகிறது. நாணய சுழற்சி இன்றைய போட்டிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையுமென நம்பப்படுகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
வாநிலை கடந்த நாட்களிலும் பார்க்க சிறப்பாக காணப்படுகிறது. மழை வாய்ப்புகள் குறைவாகவுள்ளன. கடும் வெப்பம் காரணமாக மைதானம் முழுமையாக காய்ந்து போயுள்ளது. மழை பெய்தால் கூட விட்ட உடனேயே போட்டி ஆரம்பிக்கும் அளவுக்கு மைதானம் ஈரலிப்பின்றி காணப்படுகிறது.
அணி விபரம்
இந்தியா அணி ஷர்டூல் தாகூரை நிக்கி அவருக்கு பதிலாக அக்ஷர் பட்டேலை அணியில் சேர்த்துள்ளது. இதன் மூலம் இந்தியா அணியின் துடுப்பாட்டம் பலம் பெறுவதுடன், சுழற்பந்துவீச்சு மேலும் பலமடைகிறது.
இலங்கை அணி மாற்றங்களின்றி விளையாடுகிறது.
இந்தியா
ரோஹித் ஷர்மா(தலைவர்), சுப்மன் கில், விராத் கோலி, இஷன் கிஷன், ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்தர் ஜடேஜா, ஜஸ்பிரிட் பும்ரா, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், மொஹமட் ஷிராஜ், லோகேஷ் ராகுல்
இலங்கை
டிமுத் கருணாரட்ன, பத்தும் நிஸ்ஸங்க, குஷல் மென்டிஸ், தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, தஸூன் சாணக்க, டுனித் வெல்லாளகே, மஹீஸ் தீக்ஷண, மதீஷ பத்திரனே, கஸூன் ராஜித, சரித் அசலங்க
